பிஸ்மில்லாஹ் புகழும் சலாமுறைத்து மகிமை மிக்கவனை வேண்டுகிறேன்
அருள் பொழிவாய் மவ்லா
அருள் பொழிவாய்
அடிமைகள் மீதில்
அல்லாஹ் அருள் பொழிவாய்
பாவங்கள் நிறைந்தே நிலை குழைந்தோம்
ரஹ்மத்தை வேண்டி நாங்கள் இருக்கின்றோம்
வஸீலா...
நபியின் மவ்லா அருள் பொழிவாய்
வாரி வழங்கும் வள்ளல் நீ யே
உன்னிடமே கேட்போம் நாங்கள்
கேட்கும் முன்னே கொடுப்பவனே
கவலை நீக்கி
மகிழ்வை தருவாய்
சோகம் இல்லா
நிலைமை தருவாய்
ஏக்கங்கள் யாவும் ஏற்பாய்
ஈருலகை படைத்தவனே
அணு அணுவும் உன்னிலிருந்தே
புகழ்ச்சி யாவும் உனக்கே மவ்லா ...
ஆலம் அனைத்தும் ஆளும் ரப்பே அதிசயங்கள் உன்னில் நின்றே
அடியார்களை ஆள்பவா
நீ தனித்தவன்
இணை இல்லாதவன்
சிறப்பாய் எல்லாம் செய்பவன்
சங்கையானவன்
மகத்தானவன்
அன்பானவன் அருளானவன்
ஆதம் நபிக்கு கற்றுக் கொடுத்தாய்
நூஹ் நபியை கப்பலில் காத்தாய்
கரித்திடும் ஜுவாலை
இதமாய் மாற்றி இப்ராஹிம் நபியை நெருப்பினில் காத்தாய்
யூசுஃப் நபியை மிஸ்ருக்கு அனுப்பி
மாமன்னர்
மகுடம் சூட்டி மகிழ்ந்தாய்
யூனுஸ் நபியை மீனின் வயிற்றில் உன்புகழ் ஓத வைத்தே காத்தாய்
நைல் நதியில் மூஸா நபியை மூழ்கிடாமல் மீட்டவன் நீனே
இறந்தஉடலை எழுப்பும் ஆற்றல் ஈஸா நபிக்கு கொடுத்தவனே
இறுதி நபியாம் ஹபீபை
இறுதி நபியாம் ஹபீபை
மிஃராஜின் பயணம் அழைத்து
உந்தன் காட்சி கொடுத்தாய் ...
எல்லாம் வல்லவனே என்னை பொருந்திடுவாய்