யா நாகூரி செய்லில்லாஹ் ....
யா காதிரே செய்லில்லாஹ்...
யா நாகூரி செய்லில்லாஹ் ....
அல் மதத் பி இத்நில்லாஹ்....
1. மன்னர் நபி மணிவழியில்
மாணிக்கபூர் மாபதியில்
மாண்பினரில் மாணிக்கமாய்
மகுடம் சூடிய மா மதியே
கருணை நபி சோபனமே
கருவினிலே காரணமே
தாயின் மனம் குளிர்ந்ததுவே
தந்தை மனம் மகிழ்ந்ததுவே...
யா நாகூரி செய்லில்லாஹ் ....
யா காதிரே செய்லில்லாஹ்...
2. கடலினிலே கவிழ்ந்திடவே
கலன் ஒன்று தத்தளிக்க
அலைமீது அபயக் குரல்
அழைத்தனரே காதிருவே
கலங்கியவர் சாந்தியுர
கண்ணாடி கொண்டெறிந்து
துளையடைத்து துயர் நீக்கி
கரை சேர்த்த காரணரே......
யா நாகூரி செய்லில்லாஹ் ....
யா காதிரே செய்லில்லாஹ்...
3. நாகூர் நகர் வாழ் நாயகமே
எம் கேள்வி் பார்வை புலன்களிலே
பழுதில்லாமல் காத்திடுவீர்
அற்ப வாழ்நாள் அல்லாமல்
நீண்ட நெடிய வாழ்வளித்து
பதியில் நற்கெதி நல்கிடுங்கள்
நலவுகள் அடங்களின் கருவுலமே
அப்துல் காதிரு ஆண்டகையே........
யா நாகூரி செய்லில்லாஹ் ....
யா காதிரே செய்லில்லாஹ்...
4. காதிரே உங்கள் காலடியில்
கருணை வேண்டி கவிபாடும்
காதிரி எனும் நும்நாமம்
தங்கள் தயவால் சூட்டப்பட்ட
அப்துல் ஜலீல் சுதன் எனையும்
மாதிஹுர் ரஸுலின் குழுவினையும்
அதபாய் பாடிடும் அனைவரையும்
அப்தன் ஷகூரில் இணைத்திடுங்கள்........
யா நாகூரி செய்லில்லாஹ் ....
யா காதிரே செய்லில்லாஹ்...
யா நாகூரி செய்லில்லாஹ் ....
அல் மதத் பி இத்நில்லாஹ்....