ஆமினாம்மா பேரொளி வந்தது
அகிலத்தின் அருட்கொடை மலர்ந்தது
அல்அமீனாய் பாரில் ஔிர்ந்தது
ஆமினாம்மா நூார்
ஏகன்தூதர் சொல்வதனைத்தும்
என்றும் மெய்யின் போதமே
மேதை உலகம் ஆய்ந்து இன்றும்
உண்மை என்று போற்றுமே
நூராம் நபிகள் வந்தார்கள்
சிறப்பை அள்ளி தந்தார்கள்
இறையும் அவர்கள் புகழைபாட இறக்கினானே இறைமறையை
சித்திஆமினாவின் சந்திரனின்
சிறப்பை என்ன நான் சொல்ல
சின்னசிறிய அசைவினையும்
சிறப்பாய் சொல்லிடும் குர்ஆனே
மறுவே இல்லா முழுமதியை
மன்னராக நபியோர்க்கு
மகிழ்ந்து தந்த மாதாக்கே
மலர்ந்த நாளில் சோபனம்
மறையை மலையி்ல் இறக்கினால் நடுநடுங்கி தகர்ந்திடுமே
மாநபியின் மனம் தனிலோ
மலர்ந்து மணம் வீசுதே
கயவரறியா கருப்பொருளை
கற்களும் கற்றிருந்ததே
கண்மணியின் காதலால்
கரைந்து கற்கள் கதைத்ததே
ஈமான் ஔிரும் இதயம் பகரும்
இருபதியில் இணை இல்லை
மதி ஒளியே மதி மயங்கும்
மன்னர் அழகை மிஞ்சிட
ரஹ்மத்தே ஆலம் பொருட்டால்
ரப்பின் ரஹ்மத் கிடைத்திடும்
சபையோரின் வேண்டல் ஏற்பாய்
சங்கையின் நன்னாளிலே
காதர் தந்த மொழியாக்கம்
காதிரியின் கவியாக்கம்
கல்பில் கண்ணில் ஔியேற்ற
கருணை புரிவாய் காதிரே