யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
உங்களைப் போல் யாரும்
பிறக்கவில்லை யா நபி
உங்களைப் போல் இனி பிறக்க போவதில்லை யா நபி
உங்கள் மதி முகத்தை பார்த்த எல்லோருமே
சந்திரனோ சூரியனோ தங்கமோ
என்று சொல்வார்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
நீங்கள் பிறந்த அன்று பல அதிசயங்கள்
விழுந்தழுதான் ஷைய்தான் தன் தலையில் மண்ணை போட்டான்
கெட்டோமே அழிந்தோமே கதறி அழுதான் ஷைய்தான்
எட்டு திசையும் கேட்க இபுலீஸ் அழுதான்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
வத்தி வரண்டிருந்த ஆறு குளங்கள் எல்லாம்
நீங்கள் பிறந்த அன்று நிரம்பி வழிந்ததே
பட்டமரங்கள் எல்லாம் பச்சை மரமாகின
மயிலும் குயிலும் வண்ண புறா இனமும்
கூவி மகிழ்ந்ததே நீங்கள் பிறந்த அன்று
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
அலங்கரித்து கொண்டான் தன்னை தானே அல்லாஹ்
எட்டு சுவர்கத்தை அலங்கரித்தான் அல்லாஹ்
மூடினான் மூடினான் நரகத்தை மூடினான்
ஆதி மீலாதுன் நபி தினத்தை
ஆதி நாயன் அல்லாஹ் ஆசையாய் புகழ்ந்தான்
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி
யா நபி யா நபி அன்த ஹைருன்னபி