அண்ணலின் அருள்வாசலில் அகிலம் எதை தான் அடையவில்லை
கேட்டுவந்த கைகள் இங்கு வெறுமனே திரும்பியதில்லை
நாட்டம் தருவீர் எங்கள் எஜமானே
வெறும் கையோடு நான் திரும்ப மாட்டேன்
உங்கள் பேரர்கள் அருமை பேரர்கள்
புனித பேரர்கள் பொருட்டாலே அருள்வீர்
யாசகம் கேட்டு நும்வாசல் வந்தோம்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எங்கள் உயர் நபி
உறவு இல்லாதவர்களுக்கும் உதவும் உயர் நபி
அறிந்தவர் அறியாதவர்க்கும் உதவும் உயர் நபி
ஏழைகளுக்கடைக்கலமே எங்கள் உயிர் நபி
நான் துயரத்தில் முஸிபத்தில் மூழ்கி தவிக்கிறேன்
பெரும் கஷ்டத்தின் நெருக்கடியில் நான் உழல்கின்றேன்
உதவிடுங்கள் இறைவனுக்காய் யா ஹபீபல்லாஹ்
கரம் ஏந்தி உங்கள் வாசல் வந்து நிற்கின்றேன்
எங்கு செல்வேன் நான்
காலம் என்னை எதிர்கின்றதே
யாரிடம் என் அவல நிலையை நான் சொல்லுவேன்
உங்கள் கருணையின் வாசலின் யாசகன் நான்
வேறு யாரிடம் நான் சென்று மன்றாடுவேன்
ஹக்கு புகழ்ந்தான் கரீமி என்றும்மை
மர்ஹபா இருலோகத்தின் மன்னா
எங்கள் தலையெழுத்து தாரகையாய் மிளிரும்
தாஹாவே நும் கடைப்பார்வை பட்டால்
ஆஷிக்கே முஸ்தஃபாவின் அதானே
அல்லாஹ் அல்லாஹ் அருமையிலும் அருமை
அர்சின் அமரோரும் ரசிப்பார்கள் அதனை
என்ன அழகான ஹபஷியின் அழைப்பு
மஹ்ஷர் தனிலே மன்னர் நபியை பார்த்து
மாந்தர் மொழிவார்கள் மனமேமலர்ந்து
வருகிறார்கள்... இதோ எங்கள் தாஹா...
அழகு தோள்மீது புகழ்போர்வை அணிந்து
ஒரு முறையேனும் வாழ்வில் அழைப்பு
வள்ளல் இரஸுல் ஈகையால் தரணும்
நம் நாட்டத்தை நாதரிடம் நவில்வோம்
புனித ரவ்ழாவின் வாசலை பிடித்து