தன் ஔிவை கொண்டு ஔியை படைத்து
அருளின் உருவாய் அண்ணலை அமைத்து அகிலம் தந்து விட்டான்
இப்படி இன்னொரு படைப்பை படைக்க
தன்னிடம் நாட்டம் இல்லை என்றுதான்
படைத்தவன் செய்துவிட்டான்
அவனின் வார்த்தை அர்சை கடந்து
அவர்கள் நாவில் ஒலிக்கும் போது
மோட்சம் வழங்கும் வேதமாகின்றதே... ஓ ஓ ஓ...
மறையின் ஞானம் மனிதர் வடிவில்
மாநபி வாழ்வின் ஒவ்வொறு அசைவும்
முக்த்தி நல்கிடும் நேர்வழி யாகின்றதே
தன்ஔிவை கொண்டு ஔியை படைத்து
அருளின் உருவாய் அண்ணலை அமைத்து அகிலம் தந்து விட்டான்
• கருணை அதற்கு உருவம் கொடுத்து
அன்னையின் கருவில் அதனை வளர்த்து
பாரினில் பிறக்க வைத்தான்
அழகின் மொத்தமாய் அருளாய் படைத்து
அதனின் துளியில் அகிலம் படைத்து
அவனும் புகழ்ந்துரைத்தான்
மடமை காலத்தில் பாலையில் பாவையின்
உயிரின் உடலை மணலில் புதைத்து
பீடைகள் என்று பேசி திரிந்தவறை...ஓ ஓ ஓ...
பாவையர் என்பவள் பரகத் தானவள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமை உண்டென
கண்ணியம் கொடுத்து உயர்வை பேணவைத்தோர்
தன்ஔிவை கொண்டு ஔியை படைத்து
அருளின் உருவாய் அண்ணலை அமைத்து அகிலம் தந்து விட்டான்
• வேந்தரின் வியர்வை துடைத்து எடுத்து
வியக்கும் வாசனை மணக்க அதனை
பூசி மகிழ்ந்தனரே
உமிழும் நீரும் விஷத்தை முறிக்க
கண் பிணி நீக்கி வெற்றியும் கொடுக்க
பகைமை வென்றனறே
மரத்தை அழைத்து பகர வைத்தனர்
ஈச்சை மேடயை ஏங்க வைத்தனர்
உஹது மலையை உகக்க வைத்தனரே...ஓ ஓ ஓ...
எம்கபுரின் உள்ளிழும் காட்சி கொடுப்பவர்
தவிக்கும் நாளில் தாகம் தீர்ப்பவர்
தீர்ப்பு நாளின் பரிந்துரைப்பவரே...
தன்ஔிவை கொண்டு ஔியை படைத்து
அருளின் உருவாய் அண்ணலை அமைத்து அகிலம் தந்து விட்டான்